August 27th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

நண்பர்களே!

வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது.

ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில்… வாழ்க்கைத் துணை அறிமுகமும் தேநீர் விருந்தும் வைப்பது  என முடிவு செய்திருக்கிறோம். இடமும் தேதியும் உறுதி செய்யப்பட்டபின் இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

முன்பே விஷயம் தெரிந்தும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நாங்களாக அறிவிக்கும் வரை ரகசியம் காத்த நண்பர்களுக்கு நன்றி. ஜிடாக்,மெயில், போன் என முடிந்த வகையிலெல்லாம் செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி. :) 

எங்களின் உறுதிக்கு உரமளித்த அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.


எனது பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதிலிருக்கும் சிக்கல் இன்னமும் நீடிப்பதால் இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் என் நிஜமானத் திருமணச் செய்தியை உங்களது மற்ற(எங்களை அறிந்த) நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

August 20th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்!

நூல் வெளியிடுபவர் :
தோழர் ஆர்.நல்லக்கண்ணு

நூலினை பெற்றுக்கொள்பவர் :
தோழி ரேவதி, திருநங்கை

வாழ்த்துரை :
தோழர் ஆதவன் தீட்சண்யா
தோழர் பாட்டாளி

ஏற்புரை :
அடியேன்

நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,
28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
(மியூசிக் வேர்ல்டு அருகில், கிழக்கு பதிப்பகம் எதிரில்)

அவசியம் வாங்க! அன்போடு அழைக்கிறேன்!!

பணிநிமித்தம் நான் வெளியூரில் இருப்பதால் நண்பர்களின் தொலைபேசி அழைப்பை எடுக்க இயலாத நிலையில் இருக்கலாம். எனவே இந்த விழா தொடர்பாக ஏதாவது பேசுவதாக இருந்தால் என் தம்பி லக்கிலுக்கிடம் 9841354308 என்ற தொடர்பு எண்ணில் பேசலாம்.

தோழமையுடன்
யெஸ். பாலபாரதி.

August 14th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி

இன்று மாலை துரைசாமி சாலை- வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி திறந்து வைக்கிறார்.

நேற்று மாலை முதல் பாலத்திலும், அதனை சுற்றிய இரண்டு பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜங்சன் பாக்ஸ்( டிராண்பார்மர்) இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்கத்தில் தொடர்ந்து மின்வெட்டுக்கள் நடந்து வரும் சூழ் நிலையில்.. இப்படி மின்சாரத்தை வீணடிப்பது அவசியமா..?! :(
(கடந்த ஆட்சியில்.. அதற்கு முந்தைய ஆட்சியில்.. வெள்ளைக்காரன் ஆட்சியில்…… இப்படி எல்லாம் நடக்க வில்லையா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்)